காலை, மாலை இரு வேளையில் எப்போது விளக்கேற்றுவது நல்லது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 03:02
இரண்டு நேரமும் விளக்கேற்றுவது சிறந்தது. காலையில் உதயத்திற்கு முன்னதாக அதிகாலை 5.30 முதல் 6 மணிக்குள்ளும், மாலை 6 மணிக்கு மேலும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். காலையில் வீட்டு வேலை, குழந்தைகள், கணவர், பிள்ளைகளை பள்ளி, அலுவலகம் அனுப்புதல் என பரபரப்பாக இருக்கும். இதனால் மாலையில் விளக்கேற்றுவதை பெரும்பாலும் பெண்கள் விரும்புகின்றனர். ஆனாலும், இன்னும் ஒரு அரைமணி நேரம் முன்னதாக எழுந்தால் காலையில் குளிக்கிற வழக்கமும், விளக்கேற்றும் வழக்கமும் தானாக வந்து விடும்.