Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரும்பத் திரும்பச் சொல்லுங்க இந்த 5 ... வருகிறது ரதசப்தமி திருநாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனசுக்கு ஒரு நகை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
03:02

கை, கால், கழுத்துக்கு ஒரு நகை உண்டு. மனதுக்குள்ளும் ஒரு புதுநகை பூட்டலாம். அது என்னவென்று தெரியுமா? குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்தைக் கேளுங்கள். தீயினால் பொன்னைச் சுடலாம், உருமாற்றலாம். ஆனால், அதை முழுமையாக அழித்து விட முடியாது. இதுபோல வாழ்க்கையிலும் அவ்வப்போது உள்ளம் எரியத்தான் செய்யும். துன்பப்பட்டு தான் தீரும். துன்பப்படாதவன் மனிதனாக இருக்க முடியாது. அதேநேரம், தங்கத்தை தீயில் காய்ச்சினால் அழகு பொங்கும் ஆபரணமாகவும், மதிப்புயர்ந்த நாணயமாகவும் உருமாறுகிறது. அதுபோல், துன்பப்படுகிற ஒருவனும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பொன் நகைகளை உருவாக்கி தன் மனதுக்குள் அணிந்து கொள்கிறான்.  துன்பப்படுவதன் மூலமே மனிதன் அரிய தன்மைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அதன்படியே நாயகம் வாழ்ந்தார். அவரை மனதில் கொண்டு துன்பங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இளமையில் அதிலும் சிறுவனாய் இருக்கும் காலத்திலேயே சோதனைகளை சந்திப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. நபிகள் நாயகம் அத்தகைய சோதனைகளைச் சந்தித்தார். அவர் சந்தித்த சோதனைகளைக் கேளுங்கள்.  நாயகம், அவரது தாய் ஆமீனாவின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்து விட்டார். இதனால் ஆமீனா மிகுந்த கவலையில் ஆழ்ந்தார். நபிகளைப் பெற்ற பிறகு குழந்தைக்கு பாலுõட்டக் கூட தெம்பில்லாமல் ஆகிவிட்டார். எனவே ஹலீமா என்ற செவிலித்தாயிடம் நாயகம் ஒப்படைக்கப்பட்டார். அந்தப் பெண்மணியும் நபிகளுக்கு ஐந்து வயதான போது இறந்து விட்டார். பின்னர் தாயிடம் வந்து சேர்ந்தார் நாயகம். அவருக்கு ஆறு வயதான போது, தாய் ஆமீனாவும் இறந்து விட்டார். பெற்றோரை இழந்த அந்த இளஞ்சிறுவரை, பாட்டனார் அப்துல் முத்தலிப் கவனித்துக் கொண்டார். எட்டு வயதான போது பாட்டனாரும் மறைந்து விட்டார். அதன்பிறகு அவரது பெரிய தந்தை அபூதாலிப்பிடம் வளர்ந்தார் நாயகம். இப்படி உறவுகளையெல்லாம் இழந்தாலும், பெரிய தந்தையிடம் பணிவுடன் வளர்ந்த நாயகம் பத்து வயதிலேயே ஆடு மேய்க்கச் சென்று விட்டார். மேலும் சிறு வயதிலேயே பெரிய தந்தையுடன் இணைந்து சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்கு சென்று வருவார். நாயகம் பட்ட இந்த கஷ்டங்களை எல்லாம் சிறுவர்களுக்கு பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாயகத்தின் முள் நிறைந்த வாழ்க்கைப்பாதை அவர்களது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar