Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீ பாதி! நான் பாதி! தொழில், வேலை சரியில்லையா? தீர்விருக்கு உடனடியாக...! தொழில், வேலை சரியில்லையா? ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பே இந்த உலகின் மகாசக்தி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
03:02

*எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள். அன்பே உலகின் மகாசக்தியாகும். இதை அறிந்தவன் வாழ்வே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.
*ஒழுக்கமின்றி நுõறு ஆண்டு வாழ்வதைக் காட்டிலும் ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு மிக்கது.
*விழிப்புடன் செயல்பட்டால் வாழ்க்கை சுமையில் இருந்து விடுபடலாம்.
*நல்லவர்கள் இமயமலை போல, காண்பவர்கள் அனைவர் கண்களுக்கும் மகிழ்ச்சியளிப்பர். தீயவர்களோ இருளில் எய்த அம்பு போல இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவர்.
*உதடுகள் அரண்மனைக்கதவு போல பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதியையும், நிம்மதியையும் தருவதாக அமைய வேண்டும்.
*நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர்.
*வாசனை மலர்களின் நறுமணம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாதிசைகளிலும் பரவி விடும்.
*பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் போன்ற தீய குணங்களை கொண்ட மனிதர்கள் உடல் அழகாலும், பேச்சாலும் மட்டும் நல்லவர்களாகி விட முடியாது.
*துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டியது உங்களின் பொறுப்பு. உங்களுக்காக இன்னொருவர் அந்த வேலையைச் செய்ய முடியாது.
*பிறருக்கு கொடுத்து மகிழ்வதே உண்மையான இன்பம். தயாள குணமும், பரோபகாரமும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு துணை நிற்கும்.
*உங்களுடைய வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல. உங்களின் பேச்சு சமாதானத்திற்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும்.
*பொய்யை உண்மையைப் போல திரித்துக் கூற வேண்டாம். பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம். உண்மையையும், பயனுள்ள விஷயத்தை மட்டுமே பேசுங்கள்.
*தோன்றிய அனைத்தும் என்றாவது ஒருநாள் அழிந்தே தீரும். அழிவது பற்றிக் கவலைப்படுவது அறிவுடைமையாகாது.
*துன்பத்தின் தன்மையை அறிந்து அதை ஒழிக்கும் வழியை காண்பவனே ஞானி. அதைக் கண்டு துவள்பவன் வாழ்வில் தோல்வியைச் சந்திப்பான்.
*உண்மையை யாராலும் மறைக்க முடியாது. தீமைகளில் இருந்து விடுவித்து நன்மையை அளிக்கும் உண்மையைப் பரப்ப உறுதி கொள்ளுங்கள்.
*மூடத்தனமான சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைக்கக் கூடாது. நல்லொழுக்கமும், நற்பண்புகளும் மனித வாழ்வை மேம்படுத்தும்.
*உலகத்தோடு ஒட்டி இருக்க வேண்டியது தான். அதேநேரம் அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.  (மகான் புத்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar