பதிவு செய்த நாள்
10
பிப்
2016
12:02
மகாமகம் விழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகாமகம் விழா விமரிசையாக நடக்கும். தமிழகம் உட்பட, நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், பல லட்சம் பேர் இங்கு கூடுவர். வரும், 22ம் தேதி, மகாமகம் விழா நடக்கிறது.பக்தர்களின் வசதிக்காக, ஏற்கனவே, 350 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முன்பதிவும் துவக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மேலும், 2,500 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து, மற்ற ஏழு கழகங்களில் இருந்து, 19 முதல், 25ம் தேதி வரை, 2,500 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.