பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
சென்னை: திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் அறக்கட்டளை சார்பாக, 78வது ஆண்டு
சதுர்வேத பாராயணம், மகாருத்ர யாகம் மற்றும் இதர ஹோமங்கள், திருவையாற்றில் நடைபெற உள்ளன.
வரும், 19 முதல் 29ம் தேதி வரை, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில், புஷ்ய
மண்டபத் தெரு, ஸ்ரீ காவேரி மஹாலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் கலந்து கொள்கின்றனர். 27ம் தேதி, வேதத் தேர்வு நடைபெறுகிறது. பூர்த்தி தினமான, 29ம் தேதி, மகாருத்ர யாகம் மற்றும் ருக்வேத ஹோமம் நடைபெறுகிறது.
பூர்த்தி தினத்தில், வசோத்தார ஹோமம், தம்பதி பூஜை நடைபெறும். வேத விற்பன்னர்களை,
அறக்கட்டளை நிர்வாகிகள் மயிலை குப்புசுவாமி, ஆதம்பாக்கம் சந்திரன் ஆகியோர்
கவுரவிக்கின்றனர். இந்த வேதபாராயண நிகழ்ச்சியை, 77 ஆண்டுகளுக்கு முன் துவக்கி நடத்தி வந்த, காலஞ்சென்ற சுப்ரமணிய கனபாடிகளின், நுாற்றாண்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.