அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்வது பழநி. இந்த புண்ணியதலத்தில் உள்ள பள்ளியறையில் முருகப்பெருமானின் திருப்பாதங்கள். தொட்டில் போன்ற ஊஞ்சலில் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து ஓதுவார் தாலாட்டு பாடலைப் பாடுவார். குழந்தைகளை துவங்கச் செய்வது போல் முருகப் பெருமானையும் தொட்டிலில் கிடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது. தினமும் காலையில் நடை திறந்தது முதல் அனைத்து பூஜைகளும், முடிந்ததும். இரவில் படை சாத்தப்படுவதற்கு முன்பாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. பழநி மலையில் பாலகனாக முருகப்பெருமான் வீற்றிருப்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. முருகன் தாலாட்டுக்கு பிறகு பள்ளியறைக் கதவுகள் மூடப்படும்.