பழநி: மாசிமகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம், சிறப்பு யாகபூஜை நடந்தது.
பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் பவுர்ணமி மாசிமகத்தை முன்னிட்டு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர் யாகசாலையில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பினர். ஒன்பது கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், ஸ்கந்தயாகம், வேதமந்திரங்கள் முழங்க மாசிமகத்தை முன்னிட்டு உலக நலன்வேண்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. பகல் 12 மணி உச்சிகாலபூஜையில் மூலவர் ஞான தண்டாயுதபாணிக்கு புனித கலசகும்பநீர் அபிஷேகம், சங்காபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடிகள், பால்குடங்களுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.