Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி பண்பலையில் இன்று முதல் ... தாடக நாச்சிஅம்மன் கோவிலில் மார்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெத்தப்பள்ளி கெங்கையம்மன் கோவிலில் இன்று திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
02:02

தங்கவயல்: தங்கவயலின் பழமை வாய்ந்த பெத்தப்பள்ளி கெங்கையம்மன் கோவில் திருவிழா, இன்று நடக்கிறது.தங்க சுரங்கம் ஆரம்பிக்கும் முன்பாகவே இருந்த கிராமம் பெத்தப்பள்ளி. இதை ஆரம்பத்தில் பவுத்தப்பள்ளி கிராமம் என்று அழைக்கப்பட்டு, காலத்தால் மாறி, பெத்தப்பள்ளி கிராமம் ஆனது. இந்த கிராமத்தில், 150 ஆண்டுகளுக்கு மேலான, சக்தி வாய்ந்த கெங்கையம்மன் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை தொடர்ந்து தான், ஆவணி சீத்தம்மா மலை திருவிழா, ஈஸ்வரன் கோவில் திருவிழா, வெங்கடேச பெருமாள் கோவில் திருவிழா என, தொடர்ச்சியாக விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.

தங்க சுரங்கம் ஆரம்பித்த காலத்தில், ஆங்கிலேய அதிகாரிகள், பெத்தப்பள்ளி கிராமத்துக்கு
சென்றபோது, ஒருவர் காலணி அணிந்து, கோவிலுக்குள் செல்ல முயன்றார். கிராம மக்கள்
தடுத்து, காலணியுடன் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், அவர், காலணியுடன் கோவிலுக்குள் நுழைந்தார். சில நாட்களிலேயே அவருக்கு, அம்மை போட்டது. இதனால் அவர் பயந்து நடுங்கினார். இதையடுத்து, கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்காக, தங்க சுரங்க தொழிலாளர்களுக்கும், பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அறிவித்தார். தங்க சுரங்கம் மூடும் வரை இந்த விடுமுறை நீடித்தது.

கெங்கையம்மன் கோவிலின் கல்வெட்டு களும் தமிழிலேயே இருந்தது. பெரும்பாலும் தங்கவயல் நகரை சேர்ந்தவர்களே பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். இன்று மாலை நடக்கும் அம்மன் தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். காலையிலிருந்தே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar