பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
திருப்பதி: திருப்பதி வானொலியின் பண்பலை அலைவரிசையில் சுப்ரபாதம் ஒலிக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பதி வானொலி நிலையத்தின் பண்பலை அலைவரிசையில், அதிகாலை நேரத்தில்,
ஸ்ரீவெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஒலிபரப்பட்டு வந்தது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன், சில
காரணங்களால் இந்நிகழ்ச்சியை வானொலி நிலையம் ரத்து செய்தது.மீண்டும் சுப்ரபாதம்
ஒலிபரப்ப வேண்டும் என, திருப்பதி வாழ் மக்கள், கோரிக்கை விடுத்தனர்; ஆனால் பலன் இல்லை. நேற்று, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவ், வானொலி நிலைய அதிகாரிகளிடம் பேசினார். அதன்படி, இன்று முதல், திருப்பதி பண்பலையில், அதிகாலை நேரத்தில், ஸ்ரீவெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஒலிக்க உள்ளது.