சென்னை: அறநிலையத் துறையுடன் இணைந்து, மகாமகம் விழா பிரசாதங்களை, 150 ரூபாய் விலையில் வீடுகளுக்கே, டெலிவரி செய்ய, அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அஞ்சலகங்களில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு, கும்பகோணம் மகாமக குளத்தின் புனித நீர் மற்றும், 17 கோவில்களின் பிரசாதம் அடங்கிய பார்சல், வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். சென்னையில் இதுவரை, 8,000 பேர், முன்பதிவு செய்துள்ளனர் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.