மனம் ஒருமுகப்படுதல் என்பது கடினமான விஷயம். சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் மனதில் ஏற்றிக் கொண்டு சிந்திப்பதால் அலை பாயும் நிலை ஏற்படுகிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் நிலை பெறுமாறு எண்ணுதியேல் மனமே நீ எனத் துவங்கும் பாடல் ஒன்றுள்ளது. மனம் ஒருநிலைப்பட விரும்பினால் தினமும் கோவில் வழிபாடு செய்ய வேண்டும். கோவிலைத் துõய்மை செய்தல், பூமாலை கட்டித் தருதல் போன்ற திருப்பணிகளையும் செய்யலாம். இறைவனை வழிபடுவதோடு அவரது திருநாமத்தை உரக்கச் சொல்லியும் பாடியும் வரலாம். இறையருளால் மனவலிமை ஏற்படுவதோடு சாதிக்கும் சக்தியும் உண்டாகும்.