சிவபிரான், ராமரை ராமபிரான் இதில் பிரான் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2016 04:02
பிரான் என்பதற்குத் தலைவன் என்று பொருள். ஸ்வாமி என்றாலும் தலைவன் என்பதே பொருள். இதனால் ஜீவாத்மாக்களான நாமெல்லோரும் ஆண்டவனுக்கு அடிமைப்பட்டவர்கள். ஆண்டவனுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டியவர்கள். ஆண்டவனுடன் நித்திய சம்பந்தம் கொண்டவர்கள் என்ற உண்மை நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. எனக்குத் தலைவன் இறைவன் நான் அவனது தொண்டன்; இறைவனுக்கு அடிமை செய்வதே என் வாழ்க்கையின் முதலாவது லட்சியம், முடிவான லட்சியமும் அதுவே என்ற மனநிலையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.