பெண்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறிய அறிவுரை என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2016 04:02
இதுபோன்ற ஒரு கேள்வி சுவாமி விவேகானந்தரிடம் ஒரு சமயம் கேட்கப்பட்டது. அப்போது அவர், இந்த நாட்டின் ஆண்மக்களுக்கு நான் சொல்வதையே பெண்மணி களுக்கும் கூறுவேன். இந்தியாவின் மீது நம்பிக்கை வையுங்கள். இந்திய நாட்டின் உயர்ந்த கொள்கையின் நம்பிக்கை வையுங்கள். வலிமையுடன் வாழுங்கள். எதிர்காலத்தில் நம்பிக்கை உடையவர்களாக இருங்கள் என்று குறிப்பிட்டார். முக்கியமாக, பெண்கள் சீதையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி - சீதையை முன்மாதிரியாகக் கொண்டு வாழ வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கருதினார். இந்தக் கருத்துக்கு ஒரு நடைமுறை விளக்கமாகவே, அவர் பெண்களைப் பற்றித் தெரிவித்த மற்றக் கருத்துக்களெல்லாம் விளங்குகின்றன.