எவ்வளவு ஆற்றல் உடையவராக ஒருவர் இருந்தாலும், ஆணவம் அவரை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் என்பதற்கு, ராவணன் ஓர் உதாரணம். நாணல் புயலுக்கும் தப்பிப் பிழைக்கிறது. ஆனால் உயர்ந்த பனைமரம் இடியால் தாக்கப்பட்டு அழிந்து போகிறது. அதுபோல் பணிவுடன் வாழ்பவர்கள் உயர்வு பெற்று வாழ்வார்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு வீழ்ச்சியும், அழிவும் ஏற்படும் கற்றவை. பெற்றவை அனைத்தும் மனம் போனபடி வாழும் ஆணவத்தால் அழிந்துவிடும். ஒவ்வொரு தீயசெயலைச் செய்யும்போதும், ஒருவன் அதற்குரிய தண்டனையைத் தானே விதித்துக்கொள்கிறான்.