Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாவி காணாததால் தங்கத் தேர் ரத்து வசப்பத்தூர் காசி விஸ்வநாதர்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகம்மன் கோவில் செடல் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2011
11:08

கடலூர்:கடலூர் நாகம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.கடலூர், பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் மகோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாளான நேற்று செடல் திருவிழா நடந்தது.அதனையொட்டி விடியற்காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் செடல் போட்டுக் கொண்டு கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். பலர் அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜை செய்தனர்.செடல் திருவிழாவை முன்னிட்டு லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. பண்ருட்டி மற்றும் புதுச்சேரி மார்க்கத்திலிருந்து வந்த பஸ்கள் சிதம்பரம் சாலை, ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டி.எஸ்.பி., வனிதா மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar