தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. செய்வதறியாமல் தேவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினர். சிவன் விஷம் முழுவதையும் ஒன்று திரட்டி விழுங்கினார். அது உடம்புக்குள் செல்லும் முன்பே பார்வதி, சிவனின் கழுத்தைப் பிடித்து உள்ளே செல்லாமல் நிறுத்தி விட்டாள். கண்டம் என்றால் கழுத்து. கழுத்தில் நீலநிறத்தில் விஷம் நின்றதால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது.