சில சொற்கள் எதிர்மறை சொற்களால்தான் பெருமையடைகின்றன. துன்பம் என்று ஒன்று இருப்பதால்தான் இன்பம் என்பது எல்லோராலும் விரும்பப்படுகிறது. இதுபோல்தான் ஒளி இருள், இரவு பகல், நல்லது கெட்டது போன்றவைகளும். நல்லவர்கள் நல்லவர்களாகவே வாழ்வதற்கு அவர்கள் அஞ்சி விலகி துõய பாதையில் செல்லவே தீயவர்களை இறைவன் படைத்திருக்கிறான்.தீயவை தீமை பயக்குமாதலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என வள்ளுவரும் சொல்லி வைத்துள்ளார்? சரி தீயவர்களுக்கு விடிமோட்சம் என்ன என்று கேட்கலாம். போனபிறவி பாவம் தீயவர்களாக அவர்களைப் பிறக்கச் செய்திருக்கும். அவர்களது பாவச்சுமை குறைந்தவுடன் அவர்களையும் நல்லவர்களாக பிறக்க வைப்பான் ஆண்டவன்.