மனிதப்பிறவி, இதனால்தான், அரிதரிது மானிடராதல் அரிது என்று ஔவையாரும், இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ! என்று தாயுமானவரும் குறிப்பிட்டனர். எந்த ஒன்றும் கைவசம் உள்ளபோது, அதன் பெருமையை நாம் உள்ளபடி உணர்வதில்லை. இதற்கு உதாரணமாக, உடல் ஆரோக்கியத்தையும் உயர்ந்த பதவியையும் சொல்லலாம். ஐயாயிரம் ரூபாயை ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் ஒருவன், ஐயாயிரம் ரூபாயைக் கடனாகப் பெறுவதற்கு நடையாய் நடக்கும் போதுதான், ஐயாயிரம் ரூபாயின் மதிப்பை உணர்கிறான். வெய்யிலின் அருமை நிழலில்தான் தெரியும்; தாகத்தில் நாவறண்டு தவிக்கும்போதுதான், நீரின் அருமை தெரியும்; மூச்சுக்காற்றுக்குத் திணறும்போது தான் காற்றின் அருமை புரியும். - இது போலத்தான் மனிதப்பிறவியின் அருமையை, அது நம் வசத்தில் உள்ளபோது நாம் உணராமல் பாழடிக்கிறோம்.