Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகங்காரத்தை நீக்குவதற்கு என்ன வழி? புலனடக்கம் என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோபத்தைத் தவிர்ப்பது எப்படி?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2016
05:03

கோபத்தைத் தவிர்க்கும் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லை. நீங்கள் கேட்டதனால் ஏதோ ஒரு வகையாகப் பதில் சொல்கிறேன். கோபத்தை  நரகத்தின் வாயில்  என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது. எனவே நாம் கோபத்தை அடக்க முயற்சி செய்யத்தான் வேண்டும். மகாபாரதத்தில் துரியே õதனன் முதலிய தன் மக்களை எல்லாம் காந்தாரி இழந்தாள். இதற்கெல்லாம் காரணமாக இருந்த கிருஷ்ணன் மீதும், பாண்டவர்கள் மீதும் அவள்  கடுங்கோபம் கொண்டாள். இந்த நிலையில் கிருஷ்ணன் அவளிடம் சென்றார். தன்னிடம் வந்த கிருஷ்ணனை அவள், கிருஷ்ணா! என்  புதல்வர்களெல்லாம் அழிய நீகாரணமாக இருந்தாய். அத்தகைய நீயும் உன் குலமும் அழிய வேண்டும் என்று நான் சாபம் கொடுக்கிறேன்  என்று ÷ காபத்தோடு கூறினாள். காந்தாரி கொடுத்த சாபத்தை கிருஷ்ணன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். அவர் அவ்விதம் செய்ததற்கு என்ன காரணம்?  காந்தாரி சீலமும் தவமும் உடையவள். எனவே அவள் பாண்டவர்களுக்குச் சாபம் கொடுத்தால் அது பலித்துவிடும். பாண்டவர்களுக்கு அவள்  சாபம் கொடுத்து அது பலித்துவிடாமல் இருப்பதற்காகவே தம்மை நம்பி வாழும் பாண்டவர்களைக் காந்தாரியின் சாபத்திலிருந்து காப் பாற்றுவதற்காகவே - கண்ணன் காந்தாரியின் சாபத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். காந்தாரி சாபம் கொடுத்ததனால் தனது தவ ஆற்றலை இழந்தாள்.  எனவே அவள் கண்ணனுக்குச் சாபம் கொடுத்த பிறகு பாண்டவர்களைச் சபித்தாலும், அது பலிக்காத நிலை ஏற்படுகிறது.

மேற்கூறிய நிகழ்ச்சியிலிருந்து கோபம் கொள்பவர்கள் தங்கள் தவ ஆற்றலை இழக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏழை ஒருவன் ஒவ்வொரு  பைசாவாக உண்டியில் போட்டு பணம் சேமிப்பது போல், சாதகர்களாகிய நாம் எப்போதாவது கொஞ்சம் ஜபம் செய்து ஏதோ அற்ப அளவு தவம் ÷ சர்க்கிறோம். அதையும் கோபம் கொள்வதன் மூலம் இழந்துவிடுவது சரியா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். வங்காளத்தைச் ÷ சர்ந்த அறிஞர் அஸ்வினிகுமார் தத்தர் பின்வருமாறு கூறியுள்ளார். கோபத்தால் கலங்கிய நம் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டால், நம்  விகார வடிவம் நமக்கே அருவருப்பாய்த் தோன்றுவதனால் வெட்கமும் வருத்தமும் ஏற்படும்; இதனால் கோபத்திலிருந்து விடுதலை பிறக்கும்.

கோபம் வரும்போது பேசாமல் இருப்பது, கோபத்தை அடக்குவதற்கு இன்னும் ஓர் உபாயமாகும். இந்த உபாயத்தைக் கடைப்பிடித்து பிளேட்டோ  என்ற கிரேக்கத் தத்துவஞானி கோபத்தை வென்றார். அவருக்குக் கோபம் உண்டாகும்பொழுது மவுனமாக உட்கார்ந்திருப்பார். அந்தக் கோபம்  தணிகிற வரையில் அவர் குற்றவாளியை ஒருக்காலும் தண்டிக்கமாட்டார். ஒரு நாள் அவர் கோபாவேசத்துக்குக்குள்ளாகி மவுனமாக உட்கார்ந்திருந் தபோது, ஒரு நண்பர் வந்து, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு பிளேட்டோ, நான் இப்போது ஒரு ÷ காபக்காரனைத் தண்டித்துக் கொண்டிருக்கிறேன்  என்றார். கோபம் வரும்போது மனதிற்குள் நூறு வரையில் எண்ணிய பிறகே கோபத்தை வெளிப் படுத்த வேண்டும்  என்று, ஓர் அறிவுரை நம் நாட்டில் வழங்கி வருகிறது. ஒன்று முதல் நூறு வரையில் எண்ணுவதற்குள் கோபத்தின் வேகம் குறைந்து  போகும். உரத்த குரலில் ஆண்டவன் நாமத்தை உச்சரிப்பதாலும் இதே பலன் உண்டாகும். எந்த விதத்திலாவது மனதைக் கோபத்துக்குக் காரணமாக  இருக்கும் பொருளிலிருந்து திருப்பினால், நற்பயன் விளைவது நிச்சயம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar