நடைமுறையில் திருமணம், நீத்தார் கடன் போன்றவற்றைச் செய்து வைக்கும் பிராம்மணரைப் புரோகிதர் என்கிறோம். ஆனால் புரோகிதர் என்ற சொல் புரோ + ஹிதம் என்று பிரிகிறது. புரோ(பிறருக்கு), ஹிதம், (நன்மை)என்ற இரண்டு சொற்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, மற்றவர்களுக்குப் பரோபகாரம் செய்பவர் என்ற பொருள் கிடைக்கிறது. பிறருக்கு ஹிதம் செய்பவர் என்ற கருத்தில் ஒரு காரணப் பெயராகவே ஆரம்பத்தில் புரோஹிதர் என்ற சொல் வழங்கியிருக்கிறது.