பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா: பூச்சாட்டுடன் 7ம் தேதி துவங்குகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2016 11:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி, 7ம் தேதி நடக்கிறது. சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா, பங்குனி உத்திர நட்சத்திரத்தை தொடர்ந்து வரும், செவ்வாய்கிழமையில் நடப்பது வழக்கம். கோவிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இது, 8ம் தேதி முடிகிறது. அன்று இரவே, குண்டம் விழா பூச்சாட்டுதல் நடக்கிறது. இதை தொடர்ந்து, 22ம் தேதி செவ்வாய் அதிகாலை, 4 மணிக்கு, தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநில பக்தர்களும் பங்கேற்பர்.