பதிவு செய்த நாள்
07
மார்
2016
01:03
நெத்திமேடு: சேலம், கரியநாதர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு, இன்று நான்குகால பூஜை நடக்கிறது. சேலம் நெத்திமேட்டில், பிரசித்தி பெற்ற கர்ணாம்பிகை சமேத கரியநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு, 7.30 மணிக்கு முதல்கால பூஜை, 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை, 4 மணிக்கு, நான்காம் கால பூஜை முடிந்து, கர்ணாம்பிகை தாயாரும், கரியநாதரும் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன்பின், சிறப்பு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு ஐந்து வகையான பிரசாதம் வழங்கப்படுகிறது.