தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா இன்று துவங்குகிறது. தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் உள்ள பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் மாசித்திருவிழா இன்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9 நாட்கள் நடக்கும் விழாவின் நிறை வாக வரும் 15ம் தேதி மயானகொள்ளை அடுத்தநாள் தேர் திருவிழாவும் நடக்கிறது.