பழநி முடி இறக்கும் தொழிலாளர்கள் நிரந்தர சம்பளம் வழங்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2016 01:03
பழநி: பழநி கோயில் முடிஇறக்கும் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி நகராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், சி.ஐ.டி.யூ., மாவட்ட துணை தலைவர் மோகனா, நகர கன்வீனர் பிச்சை முத்து, பழநி கோயில் சிகைதொழிலாளர் சங்க செயலாளர் நாட்ராயன் ஆகியோர் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் முடிக்காணிக்கை கட்டணத்தை ரூ.30 ஆக உயர்த்தி அதில் ரூ.25ஐ தொழிலாளர்களுக்கு கொடுப்பது என்ற முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் நூறு ஆண்டுகளாக கோயிலில் பணிபுரிந்துவருகிறோம். எங்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஊதியம் வழங்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கோரிக்கையை இந்துசமய அறநிலைத்துறை ஆணையர் மற்றும் அரசுக்கு அனுப்பிவைப்பதாக இணை ஆணையர் தெரிவித்தார்.