திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று(மார்.06ல்) தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், கோவில் உள்பிரஹாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.