மேலகாசாகுடி நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2016 01:03
காரைக்கால்: மேலகாசாகுடி நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி அபீதகுஜாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் மற்றும் அம்பாளுக்கு பலவகையான திரவத்தால் ஆபிஷேகம் நடைபெற்றது. பின் வெள்ளி நாகாபரணம் அணிவிக்கப்பட்டு சிவராத்திரி விழா மற்றும் நான்கு காலம் அன்னதானம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலகாசாகுடி பிரதோஷ வழிபாட்டு மகளிர் மன்றம் சிறப்பாக செய்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.