விழுப்புரம் : விக்கிரவாண்டி திருவேங்கட மூர்த்தி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காலையில் வரதராஜபெருமாள் கோவில், திருவேங்கடமூர்த்தி கோவிலில் அபிஷேக, ஆராதனைகள் நடந்து. மாலையில் இளைஞர்கள் குழுவினர் உறியடி நிகழ்ச்சி, சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக சென்னை ஸ்ரீபெரும்புதூர் மஹாரண்யம் முரளிதர சுவாமியின் சீடர்கள் கம்பராமாயண சொற்பொழிவு நிகழ்த்தினர். விழுப்புரம் பஜனை மண்டலி குழுவினரின் கண்ணன் உபதேசம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.