மாலை நேரத்தில் நட்சத்திரங்கள் தோன்றும் வேளை விஜயவேளை என்று குறிப்பிடப்படுகிறது. அந்த சுபமுகூர்த்த வேளையில் தொடங்கப்படும் காரியங்கள் வெற்றி பெறும் என்கிறது. முகூர்த்த சிந்தாமணி என்கிற நூல். இந்த சுபமுகூர்த்த வேளையில்தான், விஜயதசமி அன்று அம்பாள் அம்பு போட்டதாக புராணம் கூறுகிறது. தசமி மாலை நேரத்தில் சுபயாத்திரை மேற்கொண்டால் அது வெற்றிகரமாக அமையும் என்பது ஐதீகம்.