கிழக்கும், வடக்கு திசைகளை நோக்கி தீபம் இருப்பது சிறப்பு. இடநெரக்கடி காரணமாகவோ அல்லது கிழக்கு- வடக்கு திசைகளை நோக்கி தீபமேறற இயலாத சூழலிலோ மேற்கு திசை நோக்கியும் தீபம் இருக்கலாம். ஆனால், தெற்கு தவிர்க்கப்பட வேண்டும். இரண்டுமுகமாக ஏற்றி வைக்கும் தீபம், கிழக்கு - மேற்காக இருக்கலாம். ஐந்து முகமானால், திசைகளைப் பற்றிக்கவலைப் படாமல் தீபம் ஏற்றலாம். அலங்கார தீபமும், பஞ்சமுக தீபமும் எல்லாத் திசைகளை நோக்கியும் இருக்கும். இது ஆலயங்களுக்கு மட்டுமான விதி இல்லை; வீடுகளிலும் தெற்கு திசையைத் தவிர்க்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்த்த சந்நிதிகளைக் கொண்ட கருவறை தீபங்களுக்கு, திசையைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. வடக்கும் தெற்குமாக தொங்கு விளக்கு வரிசைகள் இருக்கும். ஐந்து முகம் வரும் இடங்களில் எல்லாம் திசைகøப் பார்க்க வேண்டாம். ஈசனுக்கு எந்த திக்கிலும் விளக்கு இருக்கலாம். இந்த நியமங்கள் அத்தனையும் நமக்காக ஏற்பட்டவை. ஒளிமயமானவனுக்கு திசை ஏது ? திசை என்பது நமது கற்பனை. தீப ஒளி நான்கு திசைகளையும் நோக்கியே இருக்கிறது; நான்கு திசையிலும் ஒளிப்பிழம்பு இருக்கும். ஒளியின் பரவல் எல்லாத் திசைகளிலும் இருக்கும். திரியையும் தீபத்தையும் வைத்தே திசையை நிர்ணயம் செய்கிறோம்; ஒளியை வைத்து நிர்ணயம் செய்ய இயலாது.