நீண்ட கடினமான தவம் காரணமாக மனத்தூய்மையைப் பெற்றிருக்கும் சிலரால், இறைவனின் குரலைக் கேட்க முடியும் என்பது உண்மை. பொதுவாக, தூய சாதகர்கள் ஆழ்ந்த அமைதியான சூழ்நிலையிலும், மவுனத்திலும், உள்முகமாக தியானத்தில் இருக்கும்போதும் இறைவனின் குரல் தங்கள் உள்ளத்தில் ஒலிப்பதைக் கேட்க முடியும்.