ஞானம் கனிந்து பக்தியாக ஆகிறது என்று, வைணவ ஆச்சாரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பக்தி கனிந்து, ஞானமாக ஆகிறது என்று, வேதாந்திகள் கருதுகிறார்கள். தூய பக்தியும் தூய ஞானமும் ஒன்றேயாகும். என்பது, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தாகும். ஞானமோ, பக்தியோ - எப்படியோ நம் அஞ்ஞானம் விலகினால் சரி.