ஒரு மனிதனுக்கு இரண்டு கால்கள் போல சமுதாயத்திற்கு இல்லறமும் துறவறமும் விளங்குகின்றன. அன்பின் அடித்தளத்தில் அமைவது இல்லறம் அருளின் அடித்தளத்தில் அமைவது துறவறம். அன்பும் அறமும் கொண்டது இல்லறம், அருளும் அறமும் கொண்டது துறவறம். நல்ல இல்லற வாழ்க்கை, படிப்படியாகத் துறவு மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது.