அவலுார்பேட்டை: தாயனூர் நாகலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் அடுத்த தாயனூர் கிராமத்தில் நாகலட்சுமி ÷ காவிலில், புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக யாகசாலை மற்றும் கலச பூஜைகள் நடந் தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.இதில் கோவில் நிர்வாகி ராமமூர்த்தி மற்றும் கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.