21 ஆண்டுகளுக்கு பின்.. சூலக்கல் மாரியம்ம கோவிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2016 10:03
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 21 ஆண்டுகளுக்கு பின் வரும் 18ல் நடக்கிறது; திருப்பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. கோவை மாவட்ட அம்மன் திருத்தலங்களில், சூலக்கல் மாரியம்மன் கோவில் சிறப்பு பெற்றது. 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அம்மனை வழிபட்டு வருகின்றனர். பல நுாறாண்டுகள் பழமையான திருத்தேர், புதுப்பிக்கப்பட்ட பின் விழா நடத்த வேண்டும் என முடிவு செய் யப்பட்டது. பழுதடைந்த தேருக்கு பதில், புதிய தேர் உருவாக்கும் பணி, 27.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின், வரும் 18ம் தேதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடக்கிறது. கோவில் வளாகத்தில், 15 தெய்வ சிலைகள் அமைத்தல், யாகசாலைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.