பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
உத்திரமேரூர்: திருப்புலிவனம், வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில், நேற்று காலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, பழமை வாய்ந்த வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராஜகோபுரத்தில் இருந்த ஐந்து கலசங்களில், இரண்டு கலசங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் சிதிலமடைந்தன. இதையடுத்து. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜ ÷ காபுர புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதை அடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 11ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் கோ பூஜை, குரு பூஜை, வினாயகர் பூஜை ஸ்தாபிதம், சிலைகளை அர்த்த மண்டபத்தில் அமைத்தல் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று காலை, மூன்றாம் கால கலச விளக்கு மற்றும் கணபதி ஹோமம் முடிந்து, காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.