பழநி திருமுருக பக்த சபா சார்பில் கார்த்திகை பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2016 12:03
பழநி: பழநி திருமுருக பக்த சபா சார்பில் 435வது திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் சனிபகவான், தெட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனை நடந்தது. இதை பால பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. பகல் 2 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமலைசாமி, பேராசிரியர் தேவி ஆகியோரின் பக்தி இன்னிசை சொற்பொழிவு நடந்தது. மாலை 6.30மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.