பதிவு செய்த நாள்
14
மார்
2016
12:03
ஈரோடு: ஈரோடு, பட்டேல் வீதியில் உள்ள பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா நடந்தது. லோகநாதன் வரவேற்றார். முருகேசன் அறிமுக உரையாற்றினார். சாரதா சகோதரி, பொறுப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி பேசியதாவது: அனைத்து ஆத்மாக்களிலும் தந்தையான சிவபெருமான் வருகையே சிவராத்திரியாகும். ராத்திரி என்பது ஆன்மிக பொருள், அமாவாசை இருள் அல்ல. அஞ்ஞான இருளை குறிக்கிறது. அஞ்ஞானத்தை நீக்கி, மெய்ஞானத்தை அளிக்கவே, சிவபரமாத்மா அவதரித்துள்ளார். அவர், பூவுலகம் வரும்போது, அவர் கூறும் ஞானத்தை கேட்டு விழிப்படைய வேண்டும் என்பதை விளக்குவதே, சிவராத்திரியாகும். நம்மிடம் உள்ள தீய குணங்கள் விலகும். தம்பதிகள் தங்களை புரிந்து, குடும்பமாக வாழ வேண்டும். தூய்மையான வாழ்வையும், உங்கள் ஆத்மாவை தூய்மையாக வைத்துக்கொள்ள, சிவபரமாத்மா கூறும் ஞானத்தை உணர்ந்து கொள்ளுங்கள், என்றனர். பின், அனைத்து தம்பதியினரும் விளக்கேற்றினர்.