சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 11:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா நேற்று காலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின், 10 நாள் பங்குனி பெருவிழா, கிராம தேவதை பூஜையுடன் ஆரம்பமானது. கபாலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக, கோலவிழி அம்மன் கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, வரிசை எடுத்து வரப்பட்டது. இதன்பின், கோலவிழி அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்றத்தை நேரில் பார்ப்பது போன்று தன் ஓவியத்தில் அற்புதமாக சித்தரித்துள்ளார் ஓவியர்சுசண்முகவேல். இன்று காலை சூரிய வட்டம் இரவு சந்திர வட்டம் வாகனங்களிலும் நாளை காலை 6.00 மணிக்கு அதிகார நந்தி வாகனத்திலும் கபாலீஸ்வரர் வீதி உலா வர உள்ளார்.