திருச்செந்துõர் அருகிலுள்ள ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஜோதிடத்தில் வல்லமை பெற கரும்பு, சர்க்கரை, ஞானம் பெற விபூதி, சுகவாழ்வுக்கு நெய், ஆன்மிகத்தில் வெற்றிபெற எண்ணெய், மனச்சுத்தம் கிடைக்க தாமிரபரணி தீர்த்தம், கோபம் குறைந்து சாந்தம் பெற பால், சொர்க்கத்தை அடைய சந்தனம், குரல் இனிமைக்கு தேன், மற்றவர்களை வசீகரிக்க பழச்சாறு, நீண்ட ஆயுள் பெற பஞ்சாமிர்தம், பாவ நிவர்த்திக்கு பஞ்சகவ்யம், சிறந்த வேலை கிடைக்க அன்னம், செல்வவளம் பெற மாப்பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்கின்றனர்.