Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பார்வை ஒன்றே போதுமே...! சைதன்ய நிலை என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணிலே அன்பிருந்தால்...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2016
02:03

உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் உதட்டில் இனிய வார்த்தைகள் வெளிப்படும். கண்ணிலே அன்பு நிறைந்திருந்தால் கற்சிலையில் தெய்வம் அருள்புரிவதைத் தரிசித்து மகிழலாம். முழுமையான அன்பு, அறிவு, ஆற்றல் நிறைந்த பரம்பொருளின் அம்சமாக நீங்கள் இருக்கிறீர்கள். உலக உயிர்களுக்கெல்லாம் இயன்ற நற்பணிகளைச் செய்யுங்கள். தளர்ச்சி, வருத்தம், சந்தேகம் போன்ற கீழான எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். மனம் என்னும் மாளிகையின் மூலை முடுக்கெல்லாம் அன்பு, அமைதி, பொறுமை போன்ற நற்குணங்களை நிறையுங்கள். ஒருமுகப்பட்ட மனதுடன் எந்த செயலில் ஈடுபட்டாலும் மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றை அடைய முடியும். ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது. ஒரு நாளிலோ அல்லது தற்செயல் நிகழ்வாகவோ மன உறுதியை உங்களால் அடைய முடியாது. முறையான பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே மனதை சீர்படுத்த முடியும். எந்த நிலையிலும் மற்றவருடைய உதவியை எதிர்பார்ப்பது கூடாது. சொந்தக் கால்களில் நின்று பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவனே சிறந்த வெற்றியாளனாகத் திகழ்வான். துõய்மையான மனம்
மனிதனை சுதந்திரமாக வாழ வைக்கும்.

கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கும் துõய்மையற்ற மனமோ மனிதனை அடிமையாக்கி விடும். உறவினர், நண்பர்கள் செய்யும் உதவியை விட ஒருவனுக்கு அதிகமான உதவிகளை மனம் செய்து விடும். அதனால் புத்தியுள்ளவர்கள் மனதைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். போர் வீரன் எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க மார்புக் கவசத்தை நம்புவதைப் போல, நெறிப்படுத்தப்பட்ட மனம் என்னும் கவசம் புலன்கள் என்னும் திருடர்களிடம் இருந்து மனிதனைக் காப்பாற்றும். மனம் அலை பாயும் தன்மை கொண்டது. அதன் வேகத்தை தணியச் செய்து தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். கடவுளின் திருவடியை மட்டும் சிந்தித்தால் மனம் புனிதமடைந்து எல்லையில்லா இன்பம் பெறும். கடவுளின் அன்பு என் மூலமாக வெளிப்படும் விதத்தில் செயல்படுவேன். எப்போதும் திறந்த மனநிலையோடு இருப்பேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள். வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் வருத்தப்படக் கூடாது. எந்த பிரச்னை  குறுக்கிட்டாலும் அவற்றை முறியடிக்கும் பலம் எனக்கு இருக்கிறது என்று தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். பிறர் அவமதிக்கும் போதும், உங்கள் மீது தவறு சுமத்தும் போதும் கடவுள் உங்களுக்கு பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்னும் உயர்ந்த பாடங்களை கற்பிக்கிறார் என்று உணருங்கள். கடவுளுடைய தீர்ப்பில் எந்த தவறும் இருக்காது என்ற உண்மையை உணருங்கள். யாரையும் எந்த சூழ்நிலையிலும் குறை சொல்லும் எண்ணம் உண்டாகாது. எண்ணம், சொல், செயல் மூன்றாலும்  யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். நற்செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள்.(மகான் பரமானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar