பதிவு செய்த நாள்
16
மார்
2016
11:03
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியலில், ஒரே நாளில், நான்கு கோடி ரூபாய் வசூலானது. திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்து திரும்பும் போது, உண்டியலில் காணிக்கை செலுத்துவர். அந்த காணிக்கையை, தேவஸ்தானம் தினமும் கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கிறது. மார்ச், 13ம் தேதி மாலை முதல், 14ம் தேதி மாலை வரை, உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில், நான்கு கோடி ரூபாய் வசூலானது. இது, இந்த மாதத்தின் முதல் பெரிய வருமானம். விடுப்பு எடுக்க தடைதிருமலையில், கோடை விடுமுறையின் போது, பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். இதனால், ஊழியர்கள், ஏப்., 15ம் தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை விடுப்பு எடுக்க, தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.