பதிவு செய்த நாள்
16
மார்
2016
11:03
கோவை: பேரூர் பட்டீசுவரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது,பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா முக்கியமானது. தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பட்டி விநாயகர் கோவிலில் புற்றுமண் எடுக்கப்பட்டு, அங்கிருந்து கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலில் கோ பூஜை, கஜபூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தன. பஞ்சமூ ர்த்திகள், சந்திரசேகரர், சவுந்தரவல்லி ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு, 15 வகை திரவிய அபிஷேகமும், ரிஷப யாகமும் நடந்தன. இதையடுத்து பட்டீசுவரர், பச்சைநாயகி, நடராஜர் சிவகாமி அம்பாள், சுப்ரமணியர் ஆகியோருக்கு, ரக்ஷாபந்தனம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் கொடியேற்றினர். பின்னர் கொடிமரம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. கோவிலை சுற்றி பஞ்சமூ ர்த்திகள் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகளும் இரவு, 8:00 மணிக்கு சூரியபிரபை, சந்திரபிரபை திருவீதி உலா நடந்தது. வரும், 20ம் தேதி மாலை, 5:00 மணிக்கு தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி, அலங்கார விளக்குகளால் ÷ காவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.