பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரம் கிராமத்தில், மலை மீது அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை பொன்மலை நாதர் கனககிரீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை அம்மன் மற்றும் விநாயகர், முருகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று பூத வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று, 16ம் தேதி காலை சந்திர பிரபை வாகனத்திலும், 17ம் தேதி நாக வாகனத்திலும், 18ம் தேதி காலை அம்மன் மலைக்கு செல்லுதலும், அன்றிரவு திருக்கல்யாணமும் நடக்கிறது. 19ம் தேதி தங்க விமானத்திலும், வெள்ளி தேரிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. 20ம் தேதி தேர்த்திருவிழாவும், 21ம் தேதி குதிரை வாகனத்தில் வீதி உலாவும், 22ம் தேதி ராவணேஸ்வரர் வாகனத்தில் வீதி உலாவும், 23ஆம் தேதி தீர்த்தவாரி நடராஜர் விழாவும், இரவு கொடி இறக்கமும் நடக்கிறது.