மயிலம் பங்குனிஉத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2016 12:03
மயிலம்:மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா துவங்கியது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவை துவங்கியது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள், கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். காலை 11: 30 மணிக்கு வெள்ளி விமானத்தில் உற்சவர் மலைகாட்சி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு விநாயகர் விழா, சூரிய விமான உற்சவம் நடந்தது.வரும் 18ம் தேதி காலை 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் உற்சவர் புறப்பாடும், இரவு 8 மணிக்கு தங்க மயில் வாகன உற்சவமும், இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. மார்ச் 22ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.