பதிவு செய்த நாள்
25
ஆக
2011
11:08
திருநெல்வேலி : வண்ணார்பேட்டை சந்தனமாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் கொடை விழா வரும் 28ம்தேதி நடக்கிறது. வண்ணார்பேட்டை, வடக்கு தெரு சந்தனமாரியம்மன், உச்சினி மாகாளியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் மண்டல பூஜை மற்றும் கொடை விழா வரும் 27 மற்றும் 28ம்தேதிகளில் நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு 27ம்தேதி மாலை 3 மணிக்கு வில்லிசையும், 5 மணிக்கு குடியழைப்பும் நடக்கிறது. 28ம்தேதி காலை 9 மணிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழாவும், மதியம் 12 மணிக்கு கொடை விழாவும், மாலை 3 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்தலும், 6 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12மணிக்கு படையல் தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் ராஜன், துணை தலைவர் முருகன், பொருளாளர் மகேஷ் பாபு, பத்மா ஆட்டோ குமார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.