சிவபக்தர்கள் அணிவது ருத்திராட்ச மாலை. விஷ்ணு பக்தர்கள் அணிவது துளசி மாலை. சந்தனமாலை அணியும் வழக்கம் இல்லை. பூமாலை போல் மரியாதைக்குப் பிறரால் அளிக்கப்பட்டால், அப்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம். இப்போது ருத்திராட்சமாலையின் விலை அதிகம். எனவே சந்தன மணிகளால் ஆன மாலையை ஜபத்திற்கு உபயோகிக்கும் வழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக இப்போது வந்து கொண்டிருக்கிறது.