Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்கள் சந்தனமாலை அணியலாமா? தியானம் என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புரஸ்சரணம் என்றால் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2016
06:03

ஒரு மந்திரத்தில் ஸித்தி எய்துவதற்காக, அதை அக்ஷரலக்ஷம் என்ற வகையில் தொடர்ந்து ஒருமைப்பாட்டுடன் தனியே இருந்து ஜபம் செய்வதற்கு  புரஸ்சரணம் என்று பெயர். உருவேறத் திருவேறும் என்பது நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒரு பழமொழி. ஜபக் கணக்கில் பத்தில் ஒரு பங்கு  ஹோமம் செய்ய வேண்டும், ஹோமத்தில் பத்தில் ஒரு பங்கு தர்ப்பணம் செய்ய வேண்டும், அதில் பத்தில் ஒரு பங்கு நல்லவர்களுக்கு  உணவிடுவதைச் செய்ய வேண்டும் - இப்படிப் பூர்த்தி செய்வது புரஸ்சரணம் எனப்படும். உதாரணமாக ஒரு லட்சம் தடவை ஜபம் செய்வதாக  வைத்துக்கொள்வோம். அதற்கு 10,000 தடவை ஹோமம், 1000 தடவை தர்ப்பணம், 100 நல்லவர்களுக்கு உணவிடுவது என்று அமையும்-இந்த  முறையில் பண்டை நாளில் புரஸ்சரணம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தற்காலத்தில் புரஸ்சரணம் என்பது பெரும்பாலும் இறைவன் நாமத்தை  முறையாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில் ஜபம் செய்து, பிறகு ஹோமம் முதலிய கிரியைகளைச் செய்தல் என்பதைக் குறிக்கும்.  புரஸ்சரணம் செய்யும் போது, ஹோமம் முதலிய கிரியைகளுக்குப் பதிலாக ஜபம் செய்யும் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ளவும் இடம்  உண்டு என்று, சுவாமி பிரம்மானந்தர் கூறியுள்ளார். சிரத்தையுள்ள சாதகர்கள், தாங்கள் செய்யும் ஆத்மசாதனங்களைப் பிறருக்குப் பகிரங்கப்படுத்த  விரும்பமாட்டார்கள். எனவே ஹோமம் முதலிய கிரியைகளுக்குப் பதிலாக, ஜபம் செய்யும் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வது உத்தமம்  என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டையும் அதாவது, முதலில் சொன்ன கிரியைகளையும் செய்து, ஜபத்தையும் அதிகப்படுத்துவது மிகமிக  உத்தமம் எனலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar