ஒருவரிடம் ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு அவரைப் புகழ்வது அர்த்தம் இல்லாமல் இருந்தாலும் - ஓர் அர்த்தம் அல்லது பொரு ளை நாடிச் செய்வதனால் அந்தப் புகழ்ச்சிகள் அர்த்தவாதம் எனப்படும். சில மத நூல்களின் முடிவில் அல்லது, சில ஸ்தோத்திரங்களின் முடிவில் - அவற்றைப் படிப்பதால் இன்ன இன்ன பயன்கள் கிடைக்கும் என்ற பலசுருதி அமைந்திருக்கும் இந்தப் பல சுருதியில் உள்ள உயர்வுநவிற்சி அதில் பக்தி ஏற்படுத்துவதற்காக இருப்பதால், அதுவும் அர்த்தவாதம் எனப்படும் என்று சிலர் கருதுகிறார்கள். அர்த்தவாதத்தில் மிகைப்படுத்திச் சொல்லப் படும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையாக இரா. அவை பக்தி ஏற்பட வேண்டும் என்ற ரீதியில் அமைந்த ஏதோ ஒரு நோக்கத்துடன், மத நூல்களில் சொல்லப்பட்டவை ஆகும்.