உள்ளத்தில் தர்ம சிந்தனைகள், தூய சிந்தனைகள், உயர்ந்த சிந்தனைகள், நன்மைக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைகள், தெய்விகச் சிந்தனைகள், அருள் சிந்தனைகள் இருப்பதுதான் ஆன்மிக வாழ்க்கையின் முதல்படி எனலாம். ஆதிசங்கரர் இயற்றிய விவேக சூடாமணி என்ற நூலிலுள்ள 367-ஆம் சுலோகம் இவ்விதம் கூறுகிறது.
1. மவுனம், 2. உடலைக் காப்பாற்றுவதற்கு அவசியமில்லாத பொருளை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் (அபரிக்ரகம்), 3. வைராக்கியம், 4. அவாவின்மை, 5. எப்போதும் தனிமையில் நாட்டம் ஆகியவை யோகத்தின் (ஆன்மிக வாழ்க்கையின்) முதல் வாயில் படியாகும்.