வாழப்பாடி: வாழப்பாடி அருகே, கொட்டவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற, ரத்தச்சோறு எடுக்கும் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. வாழப்பாடி அடுத்த கொட்டவாடி கிராமத்தில், பெரியாண்டிச்சியம்மன் காவல் தெய்வத்திற்கு சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் ரத்தச்சோறு எடுக்கும் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தத்தில், காவல் தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பொங்கலை பிணைந்து ரத்தச்சோறு சாப்பிட்டனர். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருவதால், நேற்று மாலை, கொட்டவாடி வசிஷ்டநதிக்கரை மயானத்தில், கொட்டவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.